Learn Sourashtra language spoken in Madurai and in many towns of Tamil Nadu, Bangalore, Hyderabad, Mumbai, Delhi etc. place.
Tuesday, May 8, 2012
Friday, May 4, 2012
அகில
உலக ஸௌராஷ்ட்ர மாநாடு !
அமி மிளெங்கென்
!அமி ஹொடெங்கென் !!
ஸௌராஷ்ட்ர
முன்னேற்றக் கழகம் நடத்தும்
அகில
உலக ஸௌராஷ்ட்ர மாநாடு
மேன்மை
மிக்க ஸௌராஷ்ட்ர மக்களுக்கு வணக்கம்.
ஸௌராஷ்ட்ர
முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சி அல்ல.
இது ஸௌராஷ்ட்ர
மக்களின் ஒட்டு மொத்த முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அமைப்பு. வருகிற ஆடி மாதத்தில்
(ஆகஸ்டில்) அகில உலக ஸௌராஷ்ட்ர மாநாடு 2012 நடத்துவதென்று ஸௌராஷ்ட்ர முன்னேற்றக் கழகம்
முடிவெடுத்துள்ளது.
மாநாட்டிற்கான
ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. உலகெங்கிலுமுள்ள நம் மக்கள் அனைவரும் குடும்ப
சகிதமாக இம்மாநாட்டிற்கு அணி திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநாட்டை
துவக்கி வைக்க குஜராத் மாநில முதலமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
தமிழக
முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்களையும் அழைக்க இருக்கின்றோம்.
இம்மாநாட்டின்
பயனாக மத்திய மாநில அரசுகளுக்கும் பொது மக்களுக்கும் நம் ஸௌராஷ்ட்ரர்களின் ஒன்றுபட்ட
வலிமை தெரிய வரும். நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகளும் உதவிகளும் முழுதாகக்
கிடைக்கும். கல்வி, அரசு உத்தியோகம், தொழில் மற்றும் சகல துறைகளிலும் நம் சமூகம் முன்னேறும்.
மதுரையில்
மாநாடு நடைபெறும் இடமும் தேதியும் நிகழ்ச்சி நிரலும் விரைவில் தெரிவிக்கப்படும். இந்த
மாநாட்டிற்கு
ஸௌராஷ்ட்ர
மக்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அகில
உலக ஸௌராஷ்ட்ர மக்களே ….
திரண்டு
வாருங்கள் ! ஒன்று கூடி ஒற்றுமையுடன் உழைப்போம்; முன்னேறுவோம்.
மாநாட்டிற்கு
தாராளமாக நிதி உதவி செய்வீர்…
குறிப்பு:
ஜாதிக் கணக்கெடுப்பு நடத்த வருபவர், “நீங்கள் என்ன ஜாதி?” என்று கேட்டால் கீழ்க்கண்ட
விபரம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
வரிசை
எண் 106 ஸௌராஷ்ட்ரா (பட்டுநூல்காரர்).
இப்படிக்கு,
ஸௌராஷ்ட்ர முன்னேற்றக் கழகத் தலவர் மற்றும் நிர்வாகிகள், மதுரை.
அலுவலகம்:
13, பந்தடி 7 வது தெரு, மதுரை-625001.
தொடர்பு
கொள்ள கை பேசி எண் 9443382232,
9363336669, 9344101010
மின்னஞ்ஜல் vasukivgr@gmail.com
Notice
is made known to all by
O.S.Subramanian.
Subscribe to:
Posts (Atom)